/* */

காஞ்சி சங்கரமடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன்: விஜயேந்திரருடன் சந்திப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு மத்திய அமைச்சர் எல் முருகன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

HIGHLIGHTS

காஞ்சி சங்கரமடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன்: விஜயேந்திரருடன் சந்திப்பு
X

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல் முருகன் காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

மோடியின் அலுவலக ஊழியராக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருந்தால் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என மத்திய அமைச்சர் எல். முருகன், காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் கேள்விக்கு காஞ்சிபுரத்தில் பதிலடி அளித்துள்ளார்..

மத்திய தகவல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை அமைச்சர் எல் முருகன் இன்று காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகை தந்த அவருக்கு சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் 15 நிமிடம் தனிமையில் உரையாடினர். அதன்பின் அமைச்சர் எல்.முருகனுக்கு, சங்கர மடம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது .


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி மாநில ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது திரும்பி உள்ள நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக அவரை சந்திக்க இயலாது நிலையில், தற்போது அவரை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்தார்.

உலக நன்மை மற்றும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தித்ததாகவும், வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும் எனவும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மோடியின் அலுவலக பணியாளர் போல் செயல்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்டபோது, தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு எனவும் , அப்படி மோடியின் சார்பாக செயல்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் எப்படி ஜெயித்திருக்க முடியும்.

அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது பாஜக மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு, மாவட்ட பொது செயலாளர் ருத்ரகுமார், பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் மாநில அணி துணைத்தலைவர் கணேஷ், ஓம்சக்தி பெருமாள் , ஜம்போடை சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 23 May 2024 3:06 PM GMT

Related News