/* */

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

HIGHLIGHTS

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
X
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையினை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வருகை புரிபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்தும் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். உடன், பள்ளியின் செயலாளர் சிவனாந்தம், 35-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம், கோட்டை பகுதி துணைச் செயலாளர் பாலச்சந்தரம், பகுதி பிரதிநிதி வேலுமணி, வார்டு செயலாளர் வக்கீல் விஜி, மணிகண்டன், பூபதி, கர்சிப் சுப்பிரமணி, ரவிச்சந்திரன், பரமசிவம், மடிகார் சங்கத் தலைவர் பாஸ்கி (எ) பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்