/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,672 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,672 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், பில்லூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று (மே.22) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,362 கன அடியாக இருந்த நிலையில், இன்று (மே.23) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,672 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 46.19 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 47.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 3.84 டிஎம்சியாக உள்ளது. மேலும், பவானிசாகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 66.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Updated On: 23 May 2024 3:43 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
  4. ஈரோடு
    பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
  5. ஈரோடு
    கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
  6. ஈரோடு
    ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...
  7. ஈரோடு
    பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
  10. கரூர்
    கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...