/* */

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்ற ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் கீழே படுத்து, எழ முடியாமல் தவித்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால்  சிகிச்சை பெற்ற ஆண் யானை உயிரிழப்பு
X

பெரும்பள்ளம் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சத்தியமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் கீழே படுத்து, எழ முடியாமல் தவித்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது.


இந்நிலையில், உடல் நலக்குறைவாலும், போதிய உணவை உட்கொள்ளாமலும் அணைப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானை இன்று (திங்கட்கிழமை) காலை திடீரென கீழே படுத்து எழ முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி, வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.

ஆனால், கால்நடை மருத்துவ குழுவினர் அளித்த தொடர் சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் படுத்த நிலையில் இருந்த யானை இன்று மதியம் உயிரிழந்தது. இதனையடுத்து, அந்த யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர், பள்ளம் தோண்டி யானையை புதைத்தனர்.

கடந்த சில மாதங்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், பெரும்பள்ளம் அணைப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானை உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் வனத்துறை மற்றும் வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 May 2024 12:10 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  2. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...
  4. நாமக்கல்
    மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...
  5. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  6. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  7. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  8. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  9. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...